ஞாயிறு, 22 நவம்பர், 2009


நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக் கிழமை மட்டும் நோன்பு வைக்கக்கூடாது என தடுத்துள்ளார்கள். இந்நிலையில் அரஃபா நோன்பு வெள்ளிக் கிழமை வைக்கலாமா?மேற்கண்ட சந்தேகம் ஏராளமான சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நபியவர்கள் வெள்ளிக் கிழமை மட்டும் நோன்பு வைப்பதை தடுத்துள்ளது உண்மையே.عَنْ مُحَمَّدِ بْنِ عَبَّادٍ قَالَ سَأَلْتُ جَابِرًا رَضِيَ اللَّهُ عَنْهُ نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ صَوْمِ يَوْمِ الْجُمُعَةِ قَالَ نَعَمْ زَادَ غَيْرُ أَبِي عَاصِمٍ يَعْنِي أَنْ يَنْفَرِدَ بِصَوْمٍ رواه البخاريமுஹம்மத் பின் அப்பாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்பதைத் தடை செய்தார்களா என்று கேட்டேன். ஜாபிர் (ரலி) அவர்கள், 'ஆம்' என்றார்கள்.மற்றோர் அறிவிப்பில் வெள்ளிக்கிழமை மட்டும் தனித்து நோன்பு வைக்கக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் தடை செய்ததாகக் கூறப்படுகிறது. (1984)عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَصُومَنَّ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ إِلَّا يَوْمًا قَبْلَهُ أَوْ بَعْدَهُ رواه البخاريஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களில் எவரும் வெள்ளிக் கிழமைக்கு முன் ஒரு நாளைச் சேர்க்காமல் அல்லது அதற்குப் பின் ஒரு நாளைச் சேர்க்காமல் நோன்பு நோற்க வேண்டாம்!இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (1985)நபியவர்கள் வெள்ளிக் கிழமை மட்டும் நோன்பு வைப்பதை தடுத்துள்ளார்கள். இதற்கான காரணம் வெள்ளிக் கிழமையை மட்டும் சிறந்த நாளாக மக்கள் கருதி விடக் கூடாது என்பதற்காகத்தான். அனைத்து நாட்களும் அல்லாஹ்விடம் சமம்தான். செவ்வாய் கிழமை கெட்ட நாள் என்றும், சனிக் கிழமை சனியன் பிடித்த நாள் என்றெல்லாம் மக்களிடம் நம்பிக்கை உள்ளது. ஆனால் இஸ்லாத்தில் நாட்களை வைத்து நல்லது கெட்டது தீர்மானிப்பது இறைவனுக்கு இணைகற்பிக்கும் காரியமாகும். செவ்வாய் கிழமையும், சனிக்கிழமையும், வெள்ளிக் கிழமையும் அல்லாஹ்விடம் சமம்தான்.ரமலானுடைய கடைசி பத்து நாட்கள், துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள், இரண்டு பெருநாட்கள் மற்றும் இன்னும் சில நாட்களில் செய்கின்ற நல்லகாரியங்களுக்கு நபியவர்கள் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று கூறியுள்ளாரகள். இது அந்த நாட்களில் நல்லறங்கள் செய்தால்தான் கிடைக்கும். அந்த நாள் வருவதினால் கிடைக்காது. இது போன்று வெள்ளிக் கிழமையிலும் நாம் செய்யும் சில நல்லறங்களுக்கு நபியவர்கள் சில நற்பாக்கியங்களைக் கூறியுள்ளார்கள். இது அந்த நல்லறங்ககளைச் செய்பவர்களுக்குத்தானே தவிர வெள்ளிக் கிழமையை அடையும் அனைவருக்குமல்ல. இது இறைவனின் நாட்டப்படி விதிக்கப்பட்ட சட்டங்களாகும். அவன் இந்த நன்மையை வெள்ளிக் கிழமையில் நமக்கு தந்துள்ளான். யூத சமுதாயத்திற்கு சனிக்கிழமையை அல்லாஹ் தேர்ந்தெடுத்து வழங்கினான். கிறித்தவ சமுதாயத்திற்கு ஞாயிற்றுக் கிழமையை அல்லாஹ் தேர்ந்தெடுத்து வழங்கினான். இது வெள்ளிக் கிழமை சிறந்த நாள் என்ற அடிப்படையில் அல்ல. அல்லாஹ் எந்த நாளிலும் வழங்குவான். அதை அவன் நமக்கு வெள்ளிக் கிழமையில் வழங்கியுள்ளான். இப்படித்தான் நாம் இதை விளங்கிக் கொள்ள வேண்டும்.இன்றைக்கு இஸ்லாமிய சமுதாய மக்களிடம் வெள்ளிக் கிழமையை மட்டும் மங்களகரமான நாள் என்று சிறப்பிக்கும் செயல்பாடுகள் உள்ளன. தப்லீக் ஜமாஅத் காரர்கள் வெள்ளிக் கிழமை இரவில் மட்டும் பள்ளிவாச லில் தங்கி தஹஜ்ஜத் தொழுவதை ஊக்குவிப்பார்கள். அது போன்று வெள்ளிக் கிழமை இரவில் தான் ஃபாத்திஹா ஒதுவார்கள். வீட்டில் குர்ஆன் கேசட்டை ஓதவைப்பார்கள். இன்னும் பற்பல காரியங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவையெல்லாம் மற்ற நாட்களை விட வெள்ளிக் கிழமையை மங்களகரம் என்ற எண்ணத்தில் செய்யப்படும் காரியங்களாகும்.இப்படிப்பட்ட செயல் வந்து விடக்கூடாது என்பதற்குத்தான் வெள்ளிக்கிழமையை சிறப்பு படுத்தி அன்று மட்டும நோன்பு வைப்பதையும், வெள்ளிக்கிழமை இரவு மட்டும தஹஜ்ஜத் தொழுவதையும் நபியவர்கள் தடுத்துள்ளார்கள். இதனை பின்வரும் ஹதீஸி லிருந்து விளங்கிக் கொள்ளலாம்.عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَخْتَصُّوا لَيْلَةَ الْجُمُعَةِ بِقِيَامٍ مِنْ بَيْنِ اللَّيَالِي وَلَا تَخُصُّوا يَوْمَ الْجُمُعَةِ بِصِيَامٍ مِنْ بَيْنِ الْأَيَّامِ إِلَّا أَنْ يَكُونَ فِي صَوْمٍ يَصُومُهُ أَحَدُكُمْ رواه مسلمநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந் தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள் ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!இதை அபூஹுரைரா (ரலி)அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல் : முஸ்லிம் (2103)நாம் நோற்கும் அரஃபா நோன்பு வெள்ளிக் கிழமையை மட்டும் சிறப்பு படுத்தும் நோக்கில் வைக்கப்படுவதில்லை. நாம் ஒவ்வொரு வருடமும் துல்ஹஜ் பிறை 9ல் அரஃபா நோன்பு வைக்கிறோம். அது இந்த வருடம் வெள்ளிக்கிழமையில் வருகிறது. சனிக்கிழமையில் வந்தால் அன்றுதான் வைப்போம். வேறு எந்த கிழமையில் வந்தாலும் அன்றுதான் வைப்போம். இது வெள்ளிக் கிழமைக்காக வைக்கப்படும் நோன்பல்ல. மாறாக துல்ஹஜ் பிறை ஒன்பதில் வைக்கும் நோன்பாகும். இதனால் தான் நபியவர்கள் 'உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!'' என்று கூறியுள்ளார்கள். அதாவது அரஃபா நோன்பு வழமையாக துல்ஹஜ் பிறை 9ல் தான் நோற்கப்படும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள úவ்ண்டும்.வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது என்ற கட்டளை நபியவர்கள் நமக்கு காட்டித்தந்த நோன்புகளுக்கு அல்ல. மாறாக நாமாக விரும்பி வைக்கின்ற நோன்புகளுக்குத்தான். நபியவர்கள் காட்டித்தந்த அரஃபா நோன்பை வெள்ளிக்கிழமை மட்டும் வைத்தால் அது நபியவர்களின் இந்தக் கட்டளையில் அடங்காது என்பதை நாம் மிகவும் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக